Tuesday, January 31, 2012

ஓர் எழுத்து ஒரு சொல் !


ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.

, மை, நீ, கை, கோ, வா, பூ, போ, பை போன்ற ஒரெழுத்து ஒரு சொல்லை பேச்சு வழக்கில் நாம் பயன்ப்படுத்துவோம். ஆனால், தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது.

ஒரு எழுத்து சொல்லாகி தருகிற அர்த்தங்களோடு பார்ப்போம்.

- பசு 
- பறவை
- இறைச்சி
- கணை
- தலைவன்
- வியப்பு
மா - பெரிய
மீ - மேல்
மூ - மூப்பு
மே - மேன்மை
மை - இருள்
மோ - மோதுதல்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - தூய்மை
தே - தெய்வம்
தை - மாதம்
சா - சாதல் 
சீ - இலக்குமி
சே - எருது
சோ - மதில்
பா - பாட்டு
பூ - மலர்
பே - நுரை
பை - பசுமை
போ - செல்
நா - நாக்கு
நீ - முன்னால் இருப்பவர்
நே - அருள்
நை - இகழ்ச்சியை குறிப்பத்து
நோ - வலி
கா - பாதுகாப்பு
கூ - வெல்
கை - ஒப்பணை
கோ - அரசன்
வீ - மலர்
வை - வைக்கோல்
வௌ - கைப்பற்றுதல்
யா - கட்டுதல்
நொ - துன்பம்
து - உணவு 

இந்த அனைத்து ஓர் எழுத்து சொற்களையும் கவனித்தீர்களானால் ஓர் ஆச்சர்யம் உங்களுக்குத் தெரியும்.இவற்றில் நொ,து,என்ற இரண்டு எழுத்துக்கள் மட்டும் தான் குறில் என்கிற குறைந்த கால அளவுடைய எழுத்துக்கள்.மற்றவை எல்லாம் நீண்ட ஒலி அளவுடைய நெடில்கள் என்பதுதான் அந்த ஆச்சிர்யம்.

----
(இணையத்தில் படித்தவை!)

முடக்கப்படும் முல்லைப்பெரியாறும் அடக்கப்படும் அணு உலையும்

தமிழன்னையின் தென்மண் காக்க முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டியது.... களம் கண்டு வென்றெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அணைக்காப்புக்குரலை இங்கே பதிவு செய்வோம்!.......... அணை உடைந்தால் இந்தியா உடையும்!.... இது பிரிவினையல்ல, எதிர்வினைக்கு எதிர்வினை!!


குடிக்கும் புனலுக்காக போராடுகிறோம். தமிழர் உழைப்பைத் தின்று உடல் வளர்த்துவரும் சேட்டன்களுக்கு இப்போது குறுதி குடிக்கும் வெறியோ.... மமதை வேண்டாம் மலையாளிகளே..... அறவழியில் எங்கள் வழிகளை அடைத்தால்போதும்..... உங்கள் இரத்தம் சுருங்கிவிடும்...... அறிவால் தீர்வு காண விரும்புகிறோம். தேவையில்லாமல் அறிவாளுக்கு அழைப்பு விடுக்காதீர்கள்!


அணு உலையால் உயிருக்கு உலை வைப்பது போதாதென்று காவிரி, கிருஷ்ணா, பாலாறு, முல்லைப் பெரியாறு என திரும்பும் திசையெல்லாம் நீர் ஆறுகளால் நம் வாழ்வுரிமைக்கும் நாச வலைவீசும் அரசியல் மோசடியை – அநீதியை அசராது துணிந்து எதிர்ப்போம்! மத்திய – அண்டை மாநில (காங்கிரஸ்) அரசுகளின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்!

கயமைக்கும் பொய்மைக்கும்
தோள் கொடுக்கிறது கேரளம்!
உரிமை – உண்மை இருந்தும்
உறங்கலாமா தமிழகம்???
இறையாண்மை போர்வையில் காலம் முழுதும் இரந்து நிற்க
தமிழரென்ன ஆண்மையற்று கிடக்கிற தன்மானமில்லா பிறவியா?? தமிழ் மண் – இனம் காக்கும் உரிமைகளைக் காக்க / மீட்டெடுக்க தமிழராய் ஒன்றுகூடி தயங்காமல் தோள் கொடுக்க வேண்டிய தருணமிது தோழர்களே!

வருங்காலத்தில் இரவாமை நிலை வேண்டின் வாருங்கள்….
நம்வளம் காக்கும் உரிமைக்கு குரல் கொடுப்போம்!
முல்லைப் பெரியாறு அணையைக் காப்போம்!
தமிழக எல்லைகளை மீட்டெடுப்போம்!!

தமிழரை மயக்கும் ஆரிய / திராவிட மாயை

இந்திக்காரன் இந்திக்காரனாக வாழ்கிறான். கன்னடன் கன்னடனாக, தெலுங்கன் தெலுங்கனாக, மலையாளி மலையாளியாக வாழ்கிறான். நாம் மட்டும் திராவிடனாக வாழவேண்டுமா?..என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.

ஆரிய மாயை நம்மை அலைக்கழித்தது. திராவிட மாயை நம்மைத் திசை திருப்பியது. நாம் தமிழர், நமது மொழி தமிழ், நமது நாடு தமிழ்நாடு என்கிற உணர்வு பெருகவேண்டும். பிற மாயைகளிலிருந்து நாம் விலக வேண்டும்.

இது தமிழர் நாடா, வந்தேறிகளின் வேட்டைக்காடா என்பதைத் தமிழன் ஒவ்வொருவரும் உணரவேண்டும். தமிழே உலகத்தின் முதன்மொழி; மாந்தனின் பிறந்தகம் குமரிக்கண்டம்; தமிழ், திராவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் ஆகும் என்று அறைந்தார் “மொழிஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர்.

தமிழரைக் கூறுபோடும் அரசியலும் சினிமாவும்

அரசியலில் தமிழ்நாட்டைக் கூறுபோட 'திராவிடம்' என்ற மாயவலை மற்றவர்களுக்கு ( கன்னடன், தெலுங்கன், மலையாளி) பயன்பட்டதுபோல்......... திரைத்துறையில் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற போர்வை தமிழரை - தமிழ்நாட்டைச் சுரண்ட இவர்களைப்போன்ற போலித் தமிழ் விசுவாசிகளுக்குப் பக்கபலமாக இருந்துக்கொண்டிருக்கிறது.....
தமிழர் பகையை அடையாளம் காண்போம்!
தமிழின விடுதலை அடைந்திட களம் நிற்போம்!!

மறைக்கப்படும் தமிழர் வரலாறு

தமிழ் வரலாற்றின் உச்சம் தெரியாததன் விளைவு..... இன்று ஜெய் ஹிந்த்..க்கு சோடை போகின்றனர் தமிழரில் சிலர். உலகிற்கே முன்னோடியான ஒரு அறிவார்ந்த சமூகத்தை.... குமரிக்கண்டத்தைப் பற்றிய ஆய்வில்கூட அயலாரின் பெரும்பங்கு நமக்கு தேவைப்படுகிறது. இத்தகைய ஆய்வுகளை இந்திய அரசு மறைமுகமாக தடுத்துவருவது இன்னொரு வரலாறு.....தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!... தளராது இனமான விடுதலைக்கு தோள்கொடுப்போம்!!


ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தலைவர்களாய் பரிணமித்தவர்கள் சமூக - அரசியல் தளத்தில் தங்களை (பெரும்பாலும் மரபுவழி வேற்றுமொழிக்காரர்களாக இருந்தமையாலா?….) நிலைநிறுத்திக்கொள்ள வேண்டி, தமிழ், தமிழின வளர்ச்சியை அடகுவைத்தும், அலட்சியப்படுத்தியும், தாழ்த்தியும் திசைதிருப்பியும் வந்ததே இன்றைய தமிழின் – தமிழனின் நிலைக்கு காரணம்! 

காங்கிரசு குப்பையிலிருந்து கன மின்சாரம்?

இந்தியாவின் வளர்ச்சியே அணு மின்சாரத்தில்தான் இருக்கிறது என்று ஒப்பாரி வைத்து கூடங்குளத்தைக் கட்டி அழும் அறிவாளிகளுக்கு இது தெரியுமா? இந்தியக் குப்பைகளை ஒன்றுக்கூட்டி மின்சாரம் தயாரித்தால் மின்சாரத்தேவை நிறைவேறுவதோடு வீதிகளும் சுத்தமாகும் அன்றோ?.... புதுதில்லி, அக்பர் சாலையிலிருந்து தொடங்கினால் உற்பத்தி அமோகமாக இருக்கும் என நினைக்கிறேன்……. காரணம் அங்கேதான் நாட்டிலேயே பழைய குப்பைகள் அதிகமாமாமாமாக……………

தமிழின மீட்சி

மதிவழி உயர்ந்த தமிழர் விதிவழி வீழ்ந்ததின் விளைவு...... கடையேழு வள்ளல்களால் வாரி இறைக்கும் வளம் பெற்ற தமிழகம், இன்று வரி கொடுத்து கையேந்தி மாற்றானிடம் இறைஞ்சுகின்ற நிலை....தேவை இறையாண்மையா?....இரவாமையா?? சிந்திக்க வேண்டிய தருணம்.........மதி விழித்து நீதிக்காக இன்று வீதியிலே பாதிதமிழர்.... மீதிபேரும் ஒன்றுசேர்ந்தால் நம்மை மோதிப்பார்க்க எவர் வருவர்?.... விதி வீழ்த்தும் மதி ஓங்கட்டும்! தமிழின விடுதலைத் தாகம் பொங்கட்டும்!!