மதிவழி உயர்ந்த தமிழர் விதிவழி வீழ்ந்ததின் விளைவு...... கடையேழு வள்ளல்களால் வாரி இறைக்கும் வளம் பெற்ற தமிழகம், இன்று வரி கொடுத்து கையேந்தி மாற்றானிடம் இறைஞ்சுகின்ற நிலை....தேவை இறையாண்மையா?....இரவாமையா?? சிந்திக்க வேண்டிய தருணம்.........மதி விழித்து நீதிக்காக இன்று வீதியிலே பாதிதமிழர்.... மீதிபேரும் ஒன்றுசேர்ந்தால் நம்மை மோதிப்பார்க்க எவர் வருவர்?.... விதி வீழ்த்தும் மதி ஓங்கட்டும்! தமிழின விடுதலைத் தாகம் பொங்கட்டும்!!
Tuesday, January 31, 2012
பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாக்காடும்........காக்கியுமா?
அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக எவ்வளவு ஆணவம் பார்த்தீர்களா?... அதுவும் பிணத்திடமும்?!... இந்த ஏவலாளிகள் தங்களிடம் இருந்த கோழைப்பிரம்புகளை (லத்திகளை) அடுக்கி பிணத்தை எரித்தார்களோ..... போதாமைக்கு அணிந்திருந்த சீருடைகளையும் கழற்றிப்போட்டு சர்வாதிகாரத்திற்கு சாமரம் வீசினார்களோ.... மானங்கெட்டவர்கள்!... சாந்தவேலுவின் மரணம் என்ன நடந்தாலும் சாந்தமாகவே இருக்கும் சொரனையற்ற தமிழர்களுக்கு ஒரு சவுக்கடி...சாவுமணி!. யார் கண்டது உங்களுக்கும் வரலாம் இதேநிலை!........இனியாவது எழுவீர்.... இனமானத்தைக்காக்க!... தோள் கொடுப்பீர் தமிழின விடுதலைக்காக!!
பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாக்காடும்........காக்கியுமா?
அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக எவ்வளவு ஆணவம் பார்த்தீர்களா?... அதுவும் பிணத்திடமும்?!... இந்த ஏவலாளிகள் தங்களிடம் இருந்த கோழைப்பிரம்புகளை (லத்திகளை) அடுக்கி பிணத்தை எரித்தார்களோ..... போதாமைக்கு அணிந்திருந்த சீருடைகளையும் கழற்றிப்போட்டு சர்வாதிகாரத்திற்கு சாமரம் வீசினார்களோ.... மானங்கெட்டவர்கள்!... சாந்தவேலுவின் மரணம் என்ன நடந்தாலும் சாந்தமாகவே இருக்கும் சொரனையற்ற தமிழர்களுக்கு ஒரு சவுக்கடி...சாவுமணி!. யார் கண்டது உங்களுக்கும் வரலாம் இதேநிலை!........இனியாவது எழுவீர்.... இனமானத்தைக்காக்க!... தோள் கொடுப்பீர் தமிழின விடுதலைக்காக!!
வல்லாதிக்க சமூகம்
புகழாளிகள், பிரபலங்கள், அதிகாரவர்க்கங்கள், சுயநல இன, மத, அரசியல் தலைவர்கள்..... இப்படி இவர்கள் பெரும்பாலும் தங்கள் இருப்பை சரிசெய்வதிலும் / உயர்த்துவதிலும் காட்டுகிற முனைப்பை ஏன் மக்களின் இழப்பில் - இறப்பில் காட்ட மற(று)க்கிறார்கள்?..... நல்லவராக தெரிபவெரெல்லாம் இதயமற்ற வல்லவர்களோடு ஐக்கியமாகி சனநாயக நாட்டில் ஒரு மாபெரும் சர்வாதிகார சமுதாயத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்களே...... இதை எப்படி நாம் கட்டுடைக்கப் போகிறோம்? இந்த சனநாயகத்தின் மன்னர்கள்(!) - மக்கள் எப்போது திரண்டெழப்போகிறார்கள்??
சோனியா அரசின் இரகசிய அறிவிப்பு!
தேசியமாக இல்லாத இந்தியாவின் தேசிய விலங்கு - குள்ள நரி; தேசிய மலர் - அரலிப் பூ; தேசிய விளையாட்டு - இனப்படுகொலைப் போர்; தேசிய உணவு - மனித மாமிசம்; தேசிய வியாதி - ஆட்கொள்ளி..... இன்னும் அறிவிப்புகள் தொடரும்!.... இப்படிக்கு - ஆள் இந்தி(ய) கேடியோ!
யார் தீவிரவாதி?
யார் தீவிரவாதி?....'தீவிரவாதி' என்பதற்கு இந்தியாவின் வரையறை என்னவென்றால்.....ஆதிக்க / ஆளும் சக்திகளின் வாதங்களை விவாதிக்காமல்(!) ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள்.... குறிப்பாக பார்ப்பனிய - பனியா கும்பலின் கருத்தியலுக்கு எதிராக ...... இல்லாத இந்திய தேசியத்திற்கு - இந்தி(ய) இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்,,,,தீவிரவாதி என்று பட்டம் சூட்டப்படுவார். இதில் வேடிக்கை - உண்மை என்னவென்றால்.... மக்களுக்கு எதிராக தீமை செய்பவர்கள் எல்லாம் 'போராளிகள்' என்றும்.... தம்மின மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்கள் 'தீவிரவாதிகள்' என்றும் வகைப்படுத்தப்படுவதுதான்! சரி.... நம்மின மக்களுக்கு நல்லது செய்வது என்பது, இந்திய அரசின் 'தீவிரவாதி' பட்டத்தை சுமந்துதான் முடியும் என்றால்.... இது நல்ல பேரும் பெருமையும் மிக்கதுதானே!
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டுவருபவர்கள் யாரும் தமிழர் அல்ல!
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டுவருபவர்கள் யாரும் தமிழர் அல்ல!.......கருணாநிதி - தெலுங்கர்; எம்.ஜி.ஆர் - மலையாளி; ஜெயலலிதா - கன்னடர்............ அண்ணா கூட முழுமையான தமிழரா? (பாரதிதாசன் குயில் ஏட்டில் குறிப்பிட்டுள்ளபடி............ . தாய் - பங்காரம்மா முதலியார்; தந்தை - நையாண்டி அய்யர்---தெலுங்கு பிராமணர்)......... ஏன்....வைகோ அவர்களும் மரபுவழி தெலுங்கரே! ஆனால் அவர் நடுநிலையாளர்களும் நம்பும் வகையில் தமிழர்களுக்காக கொள்கை உறுதியோடு செயல்பட்டுக்கொண்டிருப்பவர்!... ............இதிலிருந்து நாம் சொல்லவிழைவது சாதி / மொழி வெறியை அல்ல! மாறாக இந்த அண்டத்திற்கே அறம் சொன்ன அறிவார்ந்த தமிழினம் பல்லாண்டு காலமாக வேற்றுமொழியாளரிடம் அடிமைப்பட்டுக்கிடக்கிறது என்பதுதான்! ஈழத்தில் மேதகு பிரபாகரனைத்தவிர, தமிழகத்தில் தமிழர்க்குத் தலைமையேற்க எட்டுகோடி பேரில் ஒருவர்கூட வலிமையாக உருவெடுக்க இயலவில்லை! இதன் உள்சூழ்ச்சியை எப்போது தமிழர்கள் உள்ளறிந்து இனவிடுதலைக்காக வெளியே வரப்போகிறார்கள்?
Subscribe to:
Posts (Atom)